திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு!

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறு பழைய ஆயக்கட்டுப் பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட விட அரசு ஆணையிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறு பழைய ஆயக்கட்டுப் பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு 20.09.2023 முதல் 31.12.2023 முடிய, ஒரு நிரப்பிற்கு, நீரிழப்பு உட்பட, மொத்தம் 250 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்திலுள்ள 2786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறு பழைய ஆயக்கட்டுப் பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட விட அரசு ஆணையிட்டுள்ளது.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@katpadidmk @mp_saminathan pic.twitter.com/flen2Fnmf7
— TN DIPR (@TNDIPRNEWS) September 19, 2023
தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. திருமூர்த்தி அணை திறக்கப்படுவதால் திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்திலுள்ள 2786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன.