தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க ஆணை..

 
exam

பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வெழுதும்போது மின் தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 


தமிழகத்தில்  12-ம் வகுப்புக்கு வரும் 13-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு 14-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 6-ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன. ஏப்ரல் 20ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை  தமிழ்நாடு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டுள்ளது.   இந்த நிலையில் இன்று மின்வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில், பொதுத்தேர்வுகள் நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளது.

 மின்சாரம்

மேலும், மாணவர்கள் தேர்வெழுதும் போது மின்தடை ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடுகள் எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.  அத்துடன்  மாணவர்கள் படிக்க ஏதுவாக இரவு நேரங்களில் மின்தடை செய்யக்கூடாது என்றும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.