திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவு

 
அ

கார்த்திகைத் திருநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றவும், காவல்துறை முழு பாதுகாப்பு வழங்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென மதுரை ஏழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூண் இருக்கும் பகுதியில் ‌ நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.  இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அதில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்து உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

இதனைக் கொண்டாடும் விதமாக மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு பாஜக, அனுமன் சேனா வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இடையூறாக வெடி வெடிக்க கூடாது என திருப்பரங்குன்றம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இந்து அமைப்பினர் பாஜக மற்றும் போலீசார் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அனுமன் சேனா விஸ்வகர்மா இந்து மகாசபை மற்றும் பாஜக விட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தீர்ப்பை வரவேற்றனர்.