பானிபூரி மசாலாவில் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனமா? கடைகளில் சோதனை செய்ய ஆணை

 
பானி பூரி கடை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Image

கர்நாடக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மக்கள் விரும்பி சாப்பிடும் பானி் பூரியில் புற்றுநோயை விளைவிக்கும் செயற்கை நிறமிகள் இருப்பது தெரியவந்தது. கர்நாடகா முழுவதும் 260 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 41 மாதிரிகளில் புற்றுநோய் விளைவிக்க கூடியதாகவும்,18 மாதிரிகள் மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றதாகவும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பானி பூரி நீரில் புற்றுநோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டதால், தமிழ்நாட்டில் பானி பூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.