அனைத்து சப்ளையர்களுக்கும் சமமான அளவில் பிராந்தி, ரம், பீர் ஒதுக்க உத்தரவு
டாஸ்மாக் (TASMAC) சில்லறை விற்பனைக் கடைகளுக்கான (Retail Vending Shops) 'ஸ்டாக் டிரான்ஸ்ஃபர் இண்டெண்ட்கள்' (Stock Transfer Indents) தயாரிப்பதற்கான புதிய வழிமுறைகளை வழங்குவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. கிடங்குகளுக்கான (depots) பழைய கணக்கீட்டு முறையை மாற்றி, சில்லறை விற்பனைக் கடைகளின் விற்பனைத் தரவுகளின் (sales data) அடிப்படையில் இண்டெண்ட்களை உருவாக்க டாஸ்மாக் வாரியம் (Board of TASMAC) முடிவு செய்துள்ளது.

அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் சமமான அளவில் IMFS Ordinary (பிராந்தி மற்றும் ரம்) மற்றும் பீர் (Beer) ஒதுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை 20.07.2026 முதல் 31.08.2026 வரை உருவாக்கப்படும் RV ஸ்டாக் டிரான்ஸ்ஃபர் இண்டெண்ட்களுக்குப் பொருந்தும். டாஸ்மாக் (TASMAC) கிடங்குகளில் (Depots) இருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு மதுபானப் பங்கீட்டை எவ்வாறு சமமாக வழங்க வேண்டும் என்பதற்கான கூடுதல் விளக்கங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. சாதாரண வகை ரம் (Ordinary Rum - 180ml) பகிர்வு முறைசமப் பங்கு (Equal Share): கிடைக்கக்கூடிய மொத்தப் பங்குகளை, செயலில் உள்ள சப்ளையர்களின் எண்ணிக்கையால் வகுத்து, ஒவ்வொரு சப்ளையருக்கும் சமமான அளவு (முழு எண்ணாக மாற்றப்பட்டு) ஒதுக்கப்பட வேண்டும் என்பதை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறது.
அனைத்து சப்ளையர் பிராண்டுகளும் சமமான அளவில் ஆகஸ்ட் 31 வரை கடைகளுக்கு அனுப்பப்படுவதை மாவட்ட மேலாளர்கள் (DMs) உறுதி செய்ய வேண்டும்.. நடுத்தர மற்றும் பிரீமியம் வகைகள் (Medium and Premium Categories)7 முன்னோடி மாவட்டங்கள் (Pilot Districts) தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் வழக்கமான இண்டெண்ட் நடைமுறை தொடரும். எலைட் மற்றும் மால் கடைகளுக்கான சிறப்பு விதிமுறைகள் (Elite & Mall Shops)சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய 3 முக்கிய மாநகரங்களில் உள்ள 7 முன்னோடி மாவட்டங்களில் (Chennai Central, South, North / Coimbatore North, South / Madurai North, South) உள்ள கடைகளுக்கு, எலைட் கடைகளுக்கு நடுத்தர மற்றும் பிரீமியம் வகைகளில் உள்ள ஒவ்வொரு பிராண்டிலும் குறைந்தபட்சம் 1 கேஸ் (case) கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.மால் கடைகள்: பிரீமியம் வகையில் உள்ள ஒவ்வொரு பிராண்டிலும் குறைந்தபட்சம் 1 கேஸ் (case) கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.இந்த உத்தரவுகளை அனைத்து கிடங்குகளிலும் துல்லியமாக பின்பற்ற வேண்டும். என்றும், இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் அது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது

