அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய் புகைப்படம் வைக்க உத்தரவு
தமிழ்நாடு அரசின் அலுவலங்களில் காட்சிப்படுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் தமிழ்நாடு முதல்வர் விஜய் படம் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர அலுவலக கட்டடங்களில் கொண்டாடும் முதல்வர் விஜய் புகைப்படத்தை வைக்க அனைத்து துறைச் செயலாளர்கள் மற்றும் கலெக்டர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. மேலும் அலுவலகங்களில் பயன்படுத்த வேண்டிய விஜய் புகைப்படத்தையும் அரசு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலங்களில் பொருத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஆவடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் முதல்வரின் புகைப்படம் பொருத்தப்பட்டது. இதனை அக்கட்சி நிர்வாகிகள் அலுவலகத்தில் மாட்டிச் சென்றனர். இதேபோல் ஆவடி தொகுதியில் உள்ள அலுவலகங்களிலும் முதல்வரின் புகைப்படம் பொருத்தப்பட்டு வருகிறது. ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர் நகராட்சி போன்ற அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு பின்பு பொருத்தப்படும் என கூறப்படுகிறது.

