#BREAKING 2 நாட்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்
Nov 1, 2026, 15:02 IST1793525563632
முரசு புயல் காரணமாக இன்று முதல் 2 நாட்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று கணமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களிலும் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முரசு புயல் காரணமாக இன்று முதல் 2 நாட்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

