தமிழ்நாட்டிற்கு 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

 
வெளுத்து வாங்கப்போகும் மழை..  17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்..

தமிழ்நாட்டிற்கு 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக,  வரும் 9ம் தேதி லட்ச தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  மேலும், தமிழ்நாட்டில்  அக். 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  12 முதல் 20 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால்  7, 10, 11 ஆகிய 3 நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும்  கொடுக்கப்பட்டுள்ளது 

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. மே.1ம் தேதி 14 மாவட்டங்களில் மழை - வானிலை மையம்

அத்துடன் தமிழ்நாட்டில் இன்று முதல் 13ஆம் தேதி வரை 7 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அக். 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கையும், அக்.8, அக்.9, அக்.12, அக்.13 ஆகிய 4 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், கேரளா, கர்நாடகாவிற்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.  கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதேபொல், கர்நாடகாவில் இன்றும், நாளையும், மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், அதற்கடுத்த 3 நாட்கள் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது