#BREAKING சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்!

 
rain

சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் இன்றும் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

செயற்கைக்கோள் படங்களில் அடர்ந்த மேகக் கூட்டங்கள் தென்படுகின்றன. வடகடலோர தமிழகம், கடல் பகுதிகளில் மேகம் சூழ்ந்து காணப்படுகிறது. வளிமண்டலச் சுழற்சி காரணமாக மேகக் கூட்டங்கள் உருவாகியுள்ளன. வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெப்பச் சலன மேகங்கள் உருவாகி உள்ளன. இதனால்  சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் இன்றும் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னைக்கு இன்று (அக்.18) மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். நேற்று மாலை முதல் கன மழை பெய்த நிலையில், இன்றும் மிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.