சென்னை உட்பட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

 
rain

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Image

அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அக்டோபர் 26ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று (அக்.20) மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமாி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.