OPS VS OPS : இந்த ட்விஸ்ட்-ஐ முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்த்து இருக்கமாட்டார்..!

 
1

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கலும் தொடங்கி நடந்து வருகிறது.தமிழக அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது.தமிழகத்தை பொறுத்தவர 4 முனை போட்டி நடக்கிறது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை சந்திக்கிறது. இதில், அனைத்து கட்சிகளுமே போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து விட்டன.

ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வத்துக்கு அடுத்தடுத்து தமிழக அரசியலில் பின்னடைவே ஏற்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியது, பின்னர் கட்சியில் இருந்து நீக்கியது, பின்னர் கட்சி, சின்னம், கொடிகளை பயன்படுத்தக்கூடாது என அடுத்தடுத்து ஓ பன்னீர் செல்வத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவு என கூறி வந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு பாஜக கூட்டணியிலும் சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால் ஓ பன்னீர் செல்வம் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. தேர்தலில் போட்டியிட்டு ஒருமுறை கூட தோல்வி அடையாத ஓ பன்னீர் செல்வம், இதனால் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவெடுத்துள்ளார். தனது ஆதரவினை நிரூபிப்பதற்காக ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுயேட்சை சின்னத்தில் நிற்கும் நிலையில், இன்னொரு ஓ.பன்னீர்செல்வமும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏணி சின்னத்தில் நிற்கும் நவாஸ் கனியையும், இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் ஜெயபெருமாளையும் தோற்கடிக்க சுயேட்சை சின்னத்தில் நிற்கும் ஓபிஎஸ், தனது பெயரிலேயே மற்றொரு சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அதிர்ந்து போயுள்ளார்.