பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் - ஓபிஎஸ் ட்வீட்

 
ops

பெண் குழந்தைகள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கி நாட்டின் கண்களாக திகழ வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

tn

தேசிய பெண் குழந்தை நாள் இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 ஆண்டு தோறும் அன்று கொண்டாடப்படுகிறது.. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும். மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது. மக்கள் மற்றும் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு மற்றும் சம உரிமை கிடைப்பதை உறுதிசெய்வது,  பாலின சமநிலை மேம்படுத்துவது,  பெண் குழந்தைகளுக்கு அவர்கள் உரிமை கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவை இந்நாளின் நோக்கமாகும். 



இந்நிலையில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பூவுலகிற்கு வரமாய் வந்த தேவதைகளாகிய பெண் குழந்தைகள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கி நாட்டின் கண்களாக திகழ வேண்டும்.  பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் அஇஅதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.