ஓபிஎஸ் தலைமை ஏற்க வாரீர்! போஸ்டரால் பரபரப்பு

 
ops poster

உளுந்தூர்பேட்டையில் ஓபிஎஸ் தலைமை ஏற்க  வாரீர் என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ops poster

அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே நடைபெறும் உட்கட்சி பூசலால் நிர்வாகிகள் மாறி மாறி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் நாள்தோறும் தனித்தனியே சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பக்கம் அதிமுக நிர்வாகிகள் வந்துகொண்டுள்ளனர். இதனிடையே ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதனை ஈபிஎஸ் ஏற்க மறுத்துவிட்டார். 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரப் பகுதி முழுவதும் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மாவட்ட இணை செயலாளர் வேங்கையன் என்பவர் ஒட்டி உள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்கிட அய்யா ஓபிஎஸ் தலைமையேற்க வாரீர் வாரீர் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.