"அப்துல்கலாம் நினைவுநாளில் அவரது குறிக்கோளை எய்திட உறுதியேற்போம்" - ஓபிஎஸ்

 
tn

அப்துல்கலாம்  நினைவுநாளில்அவரது குறிக்கோளை எய்திட உறுதியேற்போம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

tn

 முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு  ஜூலை 27 ஆம் தேதி ஷில்லாங் பகுதியில் மாணவர்கள் மத்தியில் பேசி கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் உயிரிழந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கை எத்தனை நேர்த்தியானது, உண்மையான உழைப்புடன் அர்ப்பணிப்பும் கூடியது என்பதெல்லாம் இனி வருங்காலங்களுக்கும் படிப்பினையாக விளங்குகிறது.

ops

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,   தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் தென்கோடியில் பிறந்து, தன் முயற்சியாலும், கடின உழைப்பாலும், அறிவுக் கூர்மையாலும் உன்னத மனிதராக விளங்கியவரும்; மிகச் சிறந்த தேசியவாதியும்; எளிமை, அடக்கம், அறிவு, நேர்மை ஆகிய நான்கு பண்புகளுக்கு சொந்தக்காரரும்; இந்தியத் திருநாட்டின் இணையற்ற அறிவியல் அறிஞரும்; இந்திய மக்களின் உள்ளங்களில், குறிப்பாக இளைஞர்களின் உள்ளங்களில் இன்றளவிலும் குடிகொண்டு இருப்பவரும்; 'பாரத ரத்னா' உள்பட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரும், இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவரும், 'மக்கள் ஜனாதிபதி' என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவருமான டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது வணக்கத்தினையும், மரியாதையையும் செலுத்துகிறேன்.
அவரது புகழும், அவரது அர்ப்பணிப்பு உணர்வும், அவரது கண்டுபிடிப்புகளும், அவரது தியாகமும் என்றென்றும் இப்புவியில் நிலைத்து நிற்கும். இந்திய நாடு வல்லரசாக ஆக வேண்டும் என்ற அவரது குறிக்கோளினை எய்த நாம் அனைவரும் இந்த நாளில் உறுதி ஏற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.