கொரோனா தடுப்பூசி… தமிழக அரசுக்கு ஓபிஎஸ் மகன் விடுக்கும் கோரிக்கை!

 

கொரோனா தடுப்பூசி… தமிழக அரசுக்கு ஓபிஎஸ் மகன் விடுக்கும் கோரிக்கை!

கொரோனோ தடுப்பூசி செலுத்துபவர்களின் முழு விவரங்களை கணினி மயமாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ்சின் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், கொரோனோ இரண்டாம் அலையின் தாக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு ஆளாக்கி விட்டது. இனி ஒரு அலை வந்தால் அதனை எதிர்கொள்ளும் வலிமையை மக்களுக்கு தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். கொரோனா நோய் தொற்றினை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே. எனவே தடுப்பூசி செலுத்ததலை மக்கள் இயக்கமாக முன்னெடுக்கலாம். நியாய விலை கடை வாரியாகவும் பூத் வாரியாகவும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்த வேண்டியவரின் எண்ணிக்கைகளை ஆராயக் எடுப்பவர்களை நியமிக்கலாம்.

கொரோனா தடுப்பூசி… தமிழக அரசுக்கு ஓபிஎஸ் மகன் விடுக்கும் கோரிக்கை!

ஒரே குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர், குழந்தைகள், வயதானவர்கள், பொது சேவை செய்வோர், பணிக்கு செல்வோர், வெளியூர்களில் தங்கி பணி புரிவோர் என தனித்தனியாக வகைப்படுத்தி கணக்கீடு எடுத்தல் நன்று. தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்பில் கணக்கீடு எடுப்பதற்கான தனி அமைப்பு உள்ளது அதைக் கூட இந்த கணக்கெடுப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

கணக்கெடுப்பு செய்யும் போது கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்கள், கோவிஷீல்டுக்கு எடுத்துக்கொண்டவர்கள், முதல் டோஸ் மட்டும் செலுத்தியவர்கள், 2 டோஸ்களும் செலுத்தியவர்கள் முதல் டோஸ் போட்ட பின் இரண்டாவது டோஸ் எத்தனை காலத்திற்கு பின் செலுத்த வேண்டும், பிற தடுப்பூசிகள் வந்தாலும் அவற்றை எத்தனை காலத்திற்கு பின் எடுத்துக்கொள்ள வேண்டும், எந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என தனித்தனியாக பிரித்து பதிவு செய்ய வேண்டும்.

கொரோனா தடுப்பூசி… தமிழக அரசுக்கு ஓபிஎஸ் மகன் விடுக்கும் கோரிக்கை!

கணக்கெடுப்பிற்கு பின் முதலில் வயதான தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இரண்டாவதாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ்களையும் செலுத்துவதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மூன்றாவதாக அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், துப்புரவு பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொது சேவையில் ஈடுபடுவோர் சிறு,குறு தொழில் நடத்துவோருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நான்காவது வெளியில் சென்று பணியாற்றும் குடும்ப தலைவர்கள், பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு செலுத்த வேண்டும்.

இவ்வாறு வகைப்படுத்தி தடுப்பூசி செலுத்தும் போது பதிவாகும் பதிவுகள் அனைத்தையும் கணினி மயமாக்க வேண்டும். அப்போது தான் யாருக்காவது தடுப்பூசி செலுத்த விடுபட்டுள்ளதா என்பதை எளிதாக கண்டறிய முடியும். கொரோனா தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் உள்ளது. எனவே பூத் வாரியாக நியமிக்கப்படுபவர்கள் தடுப்பூசி குறித்த முழு விபரத்தையும் மக்களிடம் முழுமையாக விளக்க வேண்டும். அப்போதுதான் தடுப்பூசி பற்றிய அச்சம் குறையும்.

உள்ளாட்சி அமைப்பினர் வீடுகளுக்கே வந்து காய்ச்சல் உள்ளிட்ட உடலில் குறைபாடு உள்ளதா என ஆய்வு மேற்கொள்வது போல தடுப்பூசி கணக்கெடுப்புக்கும் செய்துவிட்டால் மக்கள் அவரவர் வாழும் இடங்களிலேயே தடுப்பூசி செலுத்துவதற்கு வசதியாக இருக்கும். மேலும் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்க பூத் வாரியாக தேர்தல் திருவிழா போல தடுப்பூசி திருவிழா நடத்தலாம். இது போல, தனி அமைப்பை உருவாக்கி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். அப்போது தான் தொற்று குறையும். எனவே தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி நோய் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற உரிய நடவடிக்கைகளை அரசு ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.