ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுக ரத்தத்தை குடித்த அட்டைகள்- ஜெயகுமார் பேட்டி

 
jayakumar

அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டுவிட்டது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

jayakumar
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளது; ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுக ரத்தத்தை குடித்த அட்டைகள், அவர்களை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறுவது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள்.

Annamalai

அதிமுக தொண்டர்களின் ரத்தத்தைக் குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை.  அதிமுகவை 90% இணைத்து விட்டதாக சசிகலா கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது.  இந்த மூவரை தவிர அதிமுகவிலிருந்து வேறு யாரும் விலகிச் செல்லவில்லை  என்றார்.