"போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பயன்கள்" - திமுக அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்!!

 
ops

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பயன்கள், அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு வழங்குவதிலும், விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் , "திமுக தனது தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது.  இந்த வாக்குறுதியை நம்பி போக்குவரத்து தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் திமுகவிற்கு வாக்களித்தனர் . அவர்களுடைய வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்துள்ள திமுக அதனை நிறைவேற்ற அது மன வருத்தத்தை அளிப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர் . பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறிவிட்டு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை கூட வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது அவர்களை ஆற்றொணாத் துயரத்தில் திமுக ஆழ்த்தியுள்ளது.  இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் ஏளனமாக பேசுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.  அரசு போக்குவரத்து கழகங்களில் நிலவும் பிரச்சினைகள், தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ops

இது ஒருபுறமிருக்க மதுரையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசுப் பேருந்து ஆரப்பாளையத்தில் இருந்து கிளம்பி காளவாசல் சென்று கொண்டிருந்த போது , போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால் வந்த தனியார் வாகனத்திற்கு வழி கொடுக்க இயலாத நிலையில், ஆத்திரமடைந்த தனியார் வாகன ஓட்டுனர் அரசுப் பேருந்தை முந்திச் என்றும் அறிவித்து அரசு பேருந்து ஓட்டுனரை இரும்பு கம்பியால் தாக்கி கைகளில் ரத்த காயத்தை ஏற்படுத்திய செய்தி வந்துள்ளது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

bus

திமுக அரசு பொறுப்பேற்ற ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் , கடன் சுமையை குறைப்பதிலும் , சிக்கனத்தை கடைபிடிப்பது,  போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பயன்களை வழங்குவதிலும்,  அகவிலைப்படி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்குவதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது மெத்தனமாக அரசு செயல்படுகின்றது.  சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது.  அரசு போக்குவரத்து கழகங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும் ,பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு . எனவே தமிழக முதல்வர் அரசு போக்குவரத்து கழகங்களில் நிலவும் பிரச்சினைகளை தீரவிசாரித்து, போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி ஓய்வூதிய பயன்கள், ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்கவும் முறைகேடுகளை களையவும், கடன் சுமையைக் குறைக்கவும், உதிரிபாகங்கள் வாங்க நிதி ஒதுக்கவும் , இலவச பயணம் காரணமாக நடத்துனர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டவும் , சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஆவன  செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.