ஓபிஎஸ் பொதுக்கூட்டம்- மழையால் பாதிப்பு

 
மழை

காஞ்சிபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் புரட்சி பயணம் தொடக்க விழா கூட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

Image

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். 

Image

அதன்பின் என்றும் அறிஞர் அண்ணாவின் தொண்டன் என வருகை பதிவேட்டில் ஓபிஎஸ் கையெழுத்திட்டார். அதன்பின்  அங்கு உள்ள அண்ணாவின் வாழ்வை பிரதிபலிக்கும் புகைபடங்களை பார்வையிட்டு கழக முன்னணி நிர்வாகிகளுடன் அண்ணாவின் பெருமைகளை பகிர்ந்து கொண்டார்.

Image

பின்னர் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக கொடியை பயன்படுத்த எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன், மற்ற தலைவர்களுடனான சந்திப்பும் தொடரும். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் வெற்றிபெற முடியும்” என உரையாற்றினார். 

Image

இதனிடையே காஞ்சிபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் புரட்சி பயணம் தொடக்க விழா கூட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் திடீரென பெய்யத் தொடங்கிய கனமழையால் ஒதுங்க இடமின்றி கூட்டத்திற்கு வந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.