முகேஷ் அம்பானியின் மகன் வரவேற்பு நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பங்கேற்பு
![ஓபிஎஸ்](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/8054fe1bdbfba351fead4090c040d2a8.png)
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டனர்.
பிரபல தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநருமான முகேஷ் திருபாய் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியினரின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரன் மெர்சென்டின் மகளான ராதிகா மெர்சென்ட்டுக்கும் கடந்த 12-ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் திருமணம் நடைபெற்றது. 13-ஆம் தேதி சுப ஆசிர்வாத நிகழ்வும், 14-ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.