ஓபிஎஸ் தாயார் மருத்துவமனையில் அனுமதி

 
o


முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

o

 ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்.   96 வயதான பழனியம்மாள் நாச்சியாருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.   இதை அடுத்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு அவருக்கு போதுமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 முன்பு உடல்நிலை பாதிப்படைந்த போது  மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.   அதன் பின்னர் தேனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.   அதன்பின்னர் மீண்டும் பழனியம்மாள் நாச்சியாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் தேனி பெரிய குளத்தில் வசித்து வருகிறார்.   பல ஆண்டுகளாகவே உடல் நல குறைவால் அவதிப்பட்டு வரும் பழனியம்மாள்,  கடந்த மாதம் தேனியிலும், அதற்கு முன் மதுரையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அங்கு குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்.   இந்நிலையில் இன்று மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சர்க்கரை அளவு , ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்ததால் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து தேனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.