பாஜகவுடன் கூட்டணி உறுதி - ஓபிஎஸ் பேட்டி

 
ops

பாஜகவுடன் கூட்டணி உறுதி என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

Ops

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பாஜக - ஓபிஎஸ் அணி இடையே நேற்று நள்ளிரவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் அருண் மேனன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

op

இந்நிலையில் பாஜக உடன் தொகுதிப் பங்கீடு குறித்து நேற்று இரவு நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எங்கள் தரப்பில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம் என்பதை பாஜக குழுவிடம் தெரிவித்தோம்; மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசிய பின்னர் சொல்வதாக பாஜக தெரிவித்துள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உடனும் பாஜக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.பாஜகவுடன் கூட்டணி உறுதி என்றார்.