மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்தார் ஓபிஎஸ்

 
ops

மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து அதிமுக உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் - 2024 கூட்டணி குறித்து  பேச்சுவார்த்தை நடத்துவதற்கான  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த கீழ்க்காணும் குழு அமைக்கப்படுகிறது. 

Ops

திரு. R. வைத்திலிங்கம், M.LA, அவர்கள் கழக இணை ஒருங்கிணைப்பாளர் 

முன்னாள் அமைச்சர் திரு. குப கிருஷ்ணன், B.A., அவர்கள் கழக துணை ஒருங்கிணைப்பாளர் 

முன்னாள் அமைச்சர் திரு. J.C.D. பிரபாகர் B.A., B. L., Ex. M.L.A., அவர்கள் கழக துணை ஒருங்கிணைப்பாளர்

 P.H. மனோஜ் பாண்டியன், M.L., M.L.A., அவர்கள் கழக துணை ஒருங்கிணைப்பாளர்

R. தர்மர், B.A., M.P., அவர்கள் இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர்

வா. புகழேந்தி, B.A., அவர்கள் கழக கொள்கை பரப்புச் செயலாளர்

மருது அழகுராஜ், B.B.A., அவர்கள் கழக கொள்கை பரப்புச் செயலாளர்