பொய்மையின் மறு உருவமாக திகழும் ஆளுநர் உரை - ஓபிஎஸ் விமர்சனம்!

 
ops

ஆளுநர் உரை, கொள்கையற்ற உரையாக, புதிய திட்டங்கள் இல்லாத உரையாக, வேலைவாய்ப்புகளுக்கு வழிவகை செய்யாத பொய்மையின் மறு உருவமாக விளங்குகிறது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் பேருரை என்பது ஆட்சியாளர்கள் இனி செய்யப் போகின்ற காரியங்களையும், கடைப்பிடிக்க இருக்கின்ற கொள்கைகளின் விளக்கத்தையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். ஆனால், இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்றுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், திட்டங்களே இல்லாத உரையாக, உண்மைகளை மறைக்கின்ற உரையாக ஆளுநர் உரை அமைந்துள்ளது.

ஆளுநர் ஆற்றிய உரை என்று புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருந்தாலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குள் ஏற்பட்ட அமளி காரணமாக உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றுவிட்டார். ஒருவேளை, ஆளுநர் அவர்கள் இந்த உரையை வாசித்து இருந்தால், அந்த உரையில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் கொடுத்தது போல் ஆகிவிடும். அந்த அளவுக்கு உண்மைக்கு மாறான தகவல்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை, "சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது" என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு போதைப் பொருட்களின் புகலிடமாக விளங்குகிறது என்பதும்; அன்றாடம் பல கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன என்பதும்; திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கொலை வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு, வேங்கைவயலில் உள்ள பட்டியல் பிரிவினர் இந்த ஆளுநர் உரையில், பத்தி 19-ல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இந்த சாதி வாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே மத்திய அரசு நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

ops

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது என்பது மாநில உரிமை தொடர்புடையதாகும். இதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதேபோன்று, இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும், அருந்ததிய சமுதாய மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில்தான், கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. இந்த நிலையில், சாதி வாரிக் கணக்கெடுப்பினை எடுக்குமாறு மத்திய அரசினை வலியுறுத்துவது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல். தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை மாநிலத்திற்கு இருக்கும் உரிமையை தாரைவார்ப்பதற்கு சமம்.நான் முதல்வன் திட்டம் மூலமாக 2,58,597 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றதாகவும், சுமார் 11,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய அளவிற்கு 7,500 கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாகவும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை இலட்சம் பணியிடங்களில் எத்தனைப் பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன, வரும் ஆண்டில் எத்தனைப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறித்து ஆளுநர் உரையில் குறிப்பிடாதது இளைஞர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் அரசுப் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் செயல், இது ஒரு சமூக அநீதி. மொத்தத்தில் இந்த ஆளுநர் உரை, கொள்கையற்ற உரையாக, புதிய திட்டங்கள் இல்லாத உரையாக, வேலைவாய்ப்புகளுக்கு வழிவகை செய்யாத பொய்மையின் மறு உருவமாக விளங்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.