#BJPAlliance "எங்களுடைய பலத்தை நிரூபிக்கவே தனி சின்னத்தில் போட்டியிடுகின்றோம்"- ஓபிஎஸ்
Mar 22, 2024, 08:29 IST1711076398963

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜக கூட்டணியில் இணைந்தார் முன்னால் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்.
அவர் பாஜகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
15 தொகுதிகளை கேட்ட அவருக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டும் பாஜக ஒதுக்கியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று அவரது ஆதரவாளர்களின் கூட்டம் நடைபெற்றது.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், " ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன்.
நானே களத்தில் நின்று என்னுடைய பலத்தை நிரூபிக்கவும், தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கவும் தனிச்சின்னத்தில் நிற்கிறோம்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காகத் தான் தேர்தலில் களம் இறங்குகிறேன். இரட்டை இலையை பெறுவதற்கு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம்.
பாஜகவில் உரிய அன்பும், அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்று கூறினார்.