சமூகப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பாக்கர் - ஓபிஎஸ் இரங்கல்
இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இஸ்லாமிய மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக துவங்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தை தொடங்கியவர்களில் ஒருவரும், இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவருமான திரு. எஸ்.எம். பாக்கர் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
இஸ்லாமிய மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக துவங்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தை தொடங்கியவர்களில் ஒருவரும், இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவருமான திரு. எஸ்.எம். பாக்கர் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத்…
— O Panneerselvam (@OfficeOfOPS) June 21, 2024
சமூகப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் திரு. பாக்கர் அவர்கள். அவருடைய இழப்பு இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. திரு. பாக்கர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது அமைப்பைச் சார்ந்தவர்களுக்கும், இஸ்லாமியப் பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


