மதுரையில் பாசன கால்வாயில் தண்ணீர் திறந்துவிடாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் - ஓபிஎஸ் அறிவிப்பு

 
Ops

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடாத தி.மு.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மதுரை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. P. அய்யப்பன், B.Com., M.L.A., அவர்கள் தலைமையில், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. R. கோபாலகிருஷ்ணன், B.Com., Ex. M.P., மதுரை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. முருகேசன், B.A., மற்றும் மாநில இளைஞர் அணிச் செயலாளர் திரு. V.R. ராஜ்மோகன், B.E., ஆகியோர் முன்னிலையில் 22-11-2023 புதன்கிழமை காலை 10-00 மணியளவில் உசிலம்பட்டி நகராட்சி, முருகன் கோயில் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.