மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் தர எதிர்ப்பு

 
s

முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான
தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய   விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜீ.வி.மார்க்கண்டேயன், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், அவதூறாகப் பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

முதலமைச்சர் விஜய் எலும்பை உடைப்பேன் என பேசிய வழக்கில் ஜாமீன் கோரிய திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கைது செய்வதற்கான எந்த காரணமும் இல்லை, மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை, உள்நோக்கத்துடன் பேசவில்லை என மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதாடினார். அதற்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியது சமூக வலைதளங்களில் வையிரலானது என்றார். கைதில் எந்த சட்ட விரோதமும் இல்லை என காவல்துறை தரப்பு கூறியது.