தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? அண்ணாமலை கேள்வி!!

 
Annamalai

 தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

annamalai mkstalin

தமிழ்‌ உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும்‌, அம்மொழிகளைப்‌ பேசும்‌ மக்களின்‌ நலனுக்கு எதிராகவும்‌ வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தக்கூடாது  என ஒன்றிய அரசினை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில்‌ கடந்த 18.10.2022 அன்று தனித்‌ தீர்மானம்‌ கொண்டு வந்து நிறைவேற்றி, அதை மாண்புமிகு குடியரசுத்‌ தலைவருக்கு  அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவையில்‌ நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தை தமிழக மக்களிடையை விளக்கிடும்‌ வகையிலும்‌ - அலுவல்‌ மொழி தொடர்பான பாராளுமன்றக்‌ குழு அறிக்கையை ஏற்க கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியும்‌, தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌ வருகிற 4.11.8082(வெள்ளிக்கிழமை) அன்று “இந்தித்‌ திணிப்பு எதிர்ப்புத்‌ தீர்மான விளக்கப்‌ பொதுக்கூட்டங்கள்‌” நடைபெறும்‌ என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று தமிழக பாஜக சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? செய்வது அறியாது சிக்கித் தவிக்கும் தமிழக அரசு  நவம்பர் நான்காம் தேதி ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க போவதாக அறிந்தேன். மக்கள் எந்த திசையை நோக்கி பயணிக்கிறார்கள் என்பது இதன் மூலமாக வெட்ட வெளிச்சமாகிவிட்டது. போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை விட்டு விட்டு தமிழை வளர்க்க 
திமுக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு  தமிழக பாஜக  ஆதரவாக இருக்கும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.