குழந்தைகள் உதவி மையத்தில் பணியாற்ற வாய்ப்பு..! +2 படித்திருந்தால் போதும்..!

 
1 1

மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் செயல்படும் குழந்தைகள் உதவி மையங்களுக்கு (1098) மேற்பார்வையாளர்கள் மற்றும் வழக்கு பணியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் என்ன உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
மேற்பார்வையாளர் 6
வழக்கு பணியாளர் 6
மொத்தம் 12

வயது வரம்பு
மதுரை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் உதவி மையத்தில் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 42 வயதைக் கடந்தவராக இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசார உதவி மையத்தில் ஏற்கனவே பணிபுரிந்தவராக இருந்தால் 52 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி
மேற்பார்வையாளர் பதவிக்கு சமூகப் பணி, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், வகுப்பு சமூகவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அனுபவம் பெற்றவராக இருப்பது சிறந்ததது. கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் அவசர கால உதவி எண்களில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வழக்கு பணியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு வாரியத்தின் கீழ் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நல்ல கம்யூனிகேஷன் திறன் அவசியம். இப்பதவிக்கும் அனுபவமுள்ளவர்கள் மற்றும் அவரச உதவி எண்களில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பள விவரம்
இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதால், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத தொகுப்பூதியம் அளிக்கபடும். அந்த வகையில், குழந்தைகள் உதவி மையத்தின் மேற்பார்வையாளருக்கு மாதம் ரூ.21,000 மற்றும் வழக்கு பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.18,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களின் இருந்து கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது. நேர்காணல் அல்லது இதர தேர்வு செய்யும் முறை குறித்து தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இதற்கான விண்ணப்பத்தை https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற மதுரை மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, கேட்கப்பட்டுள்ள விவரங்களுக்கு முறையாக கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தபால் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சென்று விண்ணப்பிக்கலாம். 

அலுவலக முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
3வது தளம், கூட்டுதல் கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
மதுரை -625 020.

விண்ணப்பப்பிக்க கடைசி நாள் 12.11.2025

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.