பொறியியல் படிப்பிற்கான கட் ஆஃப் மார்க் அதிகரிக்க வாய்ப்பு- முழு விவரம்

 
engineering

சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இயற்பியலில் 179 சென்டம் குறைந்துள்ளது. வேதியலில் சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் 3438 சென்டம் குறைந்துள்ளது. கணிதத்தில் மட்டும் 1897 சென்டம் அதிகரித்துள்ளது. உயிரியலில் 842 சென்டம் குறைந்துள்ளது. அக்கெளன்ட்ன்சி, கணினி அறிவியல், எக்னாமிக்ஸ் போன்ற பாடங்களில் இந்த ஆண்டு சென்டம் அதிகரித்துள்ளது. 

cbse exams

நிறைய எக்னாமிக்ஸ் மாணவர்கள் அதிகமான மதிப்பெண் எடுத்துள்ளதால் இந்த ஆண்டு பி.காம் போன்ற படிப்புகளுக்கு கட் ஆஃப் மார்க் அதிகமாக வாய்ப்புள்ளது. பொறியயில் படிப்பை பொருத்தவரை சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் கட் ஆஃப் உயருவதற்கான வாய்ப்புதான் உள்ளது. இருந்தாலும், இந்த ஆண்டு 25 ஆயிரம் சீட் அதிகமாவதால் சென்ற ஆண்டு என்ன கட்ஆஃப் மதிப்பெண் இருந்ததோ அதே நிலைதான் தொடர வாய்ப்புள்ளது. அப்படியே இருந்தாலும் 195-க்கு மேல் கட்ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. ஏனென்றால், வேதியியல் சென்டம் குறைந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

கால்நடை மற்றும் மீன்வளம் தொடர்பான படிப்புகளைப் பொருத்தவரை இந்த ஆண்டு வேதியலிலும், உயிரியலிலும் மதிப்பெண் குறைந்துள்ளதால் சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் கட் ஆஃப் மதிப்பெண் 2 லிருந்து 4 குறைய வாய்ப்புள்ளது. வேளாண் படிப்புகளை பொருத்தவரையில் கணிதம், கணினி அறிவியலிலும் சென்டம் அதிகமாக உள்ளது. வேளாண் படிப்புகளில் கட் ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. கணினி அறிவியல் மாணவர்களுக்கு வேளாண் படிப்புகள் கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.