வெளியான கருத்துக்கணிப்பு : பீகாரில் பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்ட நிலை தான் தவெக தலைவர் விஜய்க்கு..!

 
1

ஜனநாயகன் பட பிரச்சனை கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை, தனிப்பட்ட பிரச்சனை என அடுத்தடுத்து நெருக்கடிகளை சந்தித்து வரும் விஜய்க்கு அக்னி பரிட்சையாகவே சமீப நாட்கள் கடந்து செல்கின்றன. தவெகவுக்கு 80 சீட் வரை பாஜக ஆஃபர் கொடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்த நிலையில், தவெக தரப்பு அளித்த விளக்கத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால் விஜய்யின் தவெக வரும் தேர்தலில் தனித்து போட்டியிடும் நிலையே ஏற்பட்டுள்ளது. திமுக - அதிமுக என இருபெரும் கட்சிகளை எதிர்த்து விஜய் தனித்து போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு பீகாரில் பிரபல் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்று சி-வோட்டர் கருத்து கணிப்பு நிறுவனத்தின் யஷ்வந்த் தேஷ்முக் கூறியுள்ளார்.
 

டெல்லியில் நேற்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தேஷ்முக் கூறியதாவது:- தனித்து போட்டியிட்டால் விஜய் வெற்றி பெற போவது இல்லை. ரஜினிகாந்த் அரசியலில் நுழைய முற்பட்ட போது நாங்கள் நடத்திய சர்வேயில் 16, 17 சதவீத வாக்குகள் பெறுவார் என்பது தெரிந்தது.விஜய் 15, 16 சதவீதத்தை தாண்டப் போவது இல்லை. தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட விஜய் வெல்லப்போவது இல்லை. ஒருவேளை கூட்டணி அமைத்தால் மிகப்பெரும் திருப்புமுனையாக இருக்கும். திமுக - அதிமுக இடையே வாக்கு சதவீதம் 5 சதவீதத்திற்கும் கீழ்தான் உள்ளது.

எனவே விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் முற்றிலும் வேறுபட்டதாக களம் மாறிவிடும். ஆனால், அவர் தொடர்ந்து தனித்தே போட்டியிட்டால் பிரசாந்த் கிஷோர் கதிதான் விஜய்க்கு ஏற்படும். 15 சதவீதம் வாங்கினால் கூட அவரால் வெல்ல முடியாது" என்று கூறினார். பிரபல தேர்தல் வியூக வகுப்பாளாரான பிரசாந்த் கிஷோர் ஜன்சுராஜ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பீகார் சட்டமன்ற் தேர்தலில் தனித்து களம் கண்ட ஜன்சுராஜ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பிரசாந்த் கிஷோரே படுதோல்வியை சந்தித்தார். வெறும் 3.44 சதவீத வாக்குகளே பிரசாந்த் கிஷோர் பெற்றார்