காவல்துறை சார்பில் நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனங்கள் இயக்கம்

 
stalin

காவல்துறை சார்பில் நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனங்களின் செயல்பாட்டினை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 8.3.2024 அன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 4 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனங்களின் செயல்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, அவ்வாகனங்களுக்கான சாவியினை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்களிடம் வழங்கினார்.

stalin

நவீன தொழில்நுட்பங்களை கொண்டு உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை காவல்துறை அதிகாரிகள் திறம்பட கையாளுவதற்காக மாநில காவல் படைகளின் நவீனமயமாக்கல் (Modernisation of Police Force) திட்டத்தின் கீழ் 93.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெகா சிட்டி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 1030 இடங்களில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் நிறுவப்பட்ட 3090 Artificial Intelligence-ஆல் இயங்கும் CCTV கேமராக்கள், 753 வாகன கண்காணிப்பு சாதனங்கள், 7 வான்வழி கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் 7 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் நகரம் முழுவதும் விரிவான கண்காணிப்பு உறுதி செய்யப்படுகிறது.

stalin

அதன் முதற்கட்டமாக, 4 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனங்கள் (Mobile Command and Control Centre-MCCC) நகர கண்காணிப்புக்காக பயன்படுத்த தயாராக உள்ளது. மேலும், 2250 கேமராக்கள் மற்றும் 650 வாகனங்கள் நிகழ்நேர கண்காணிப்பிற்காக தானியங்கி வாகன இருப்பிட அமைப்புடன் (Automatic Vehicle Location System AVLS) நிறுவப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர காவல் நிலையங்களில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு, நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ட்ரோன்கள் மற்றும் CCTV கேமராக்கள் நிகழ்நேர வீடியோ பதிவுகளை அனுப்புகின்றன. MCCC வாகனங்கள் நகரம் முழுவதும் முக்கியமான பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் இடங்களில் நிறுத்தப்பட்டு நிகழ்நேர வீடியோவை பதிவு செய்ய தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும். நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இரண்டு நைட் விக்ஷன் ஒருங்கிணைந்த கேமராக்கள் மற்றும் ஒலிப்பெருக்கி ட்ரோன்கள், அமைப்புகள்
மேம்பட்ட சூழ்நிலை விழிப்புணர்விற்கான வான்வழி பார்வையை வழங்குகின்றன மற்றும் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து சரி செய்யவும் பயன்படுத்தப்படும். இந்த அம்சங்கள் அவசர காலங்களில் திறமையான தகவல்தொடர்புக்கு பயன்படும்.