ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு
Updated: May 24, 2024, 13:36 IST1716537972643
தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும்.

எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


