ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு

 
ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு

டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.

tn

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மேட்டூர் அணையிலிருந்து கடந்த 2021 ஆம் ஆண்டு குறித்த நாளான ஜூன் 12 ஆம் நாளன்று குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டு, குறுவை நெல் சாகுபடியில் புதிய சாதனை படைக்கப்பட்டது. அந்தவகையில் கடந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்ததால் காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12க்கு முன்பாகவே, மே 24 ஆம் தேதியே உபரிநீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவிட்டார்.

tn

நமது நாடு சுதந்திரம் அடைந்தது முதல், குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்படும் நாளாகிய ஜூன் 12ஆம் நாளன்று இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. இதனால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மற்றும் கடலூர் ஆகிய காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது, முழுமையாக டெல்டா பகுதியின் கடைமடை வரை அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அடைய தூர்வாரும் பணிகளை விரைந்து செய்யுமாறு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.