சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் கேலரி திறப்பு

 
சென்னை சேப்பாக்கத்தில் 'கலைஞர் மு.கருணாநிதி' கேலரி திறப்பு.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புதிய கேலரிக்கு 'கலைஞர் மு.கருணாநிதி' பெயரையும் சூட்டினார். நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி, சி.எஸ்.கே உரிமையாளர் ஸ்ரீனிவாசன், கேப்டன் தோனி, பிராவோ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ரூ.139 கோடியில் புதிதாக கலைஞர் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.  2021ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் மீண்டும் வரும் 22 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சீல்வைக்கப்பட்ட ஐ.ஜே.கே கேலரிகளை மீண்டும் திறக்க கடந்த 2020ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும், வருகின்ற 22ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டிகளை பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.