“எத்தனை முறை தேர்தல் நடந்தாலும் பிரதமராக மோடியே வருவார்”- ஓபிஎஸ்

இன்னும் எத்தனை முறை தேர்தல் நடந்தாலும் பிரதமராக மோடியே வருவார் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இன்று 25. 03.2025 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் தமிழக பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையினர் அணி சார்பில் புனித ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியானது எழும்பூர் ஃபைசல் மஹால் இடத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதி கட்சி தலைவர் A.C. சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், திரு ரவி பச்சமுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் திரு.பி ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - என்னை விருந்தினராக உரிமையோடு அழைத்த பாஜகவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக சார்பில் நோன்பு நடப்பது பாராட்டுக்குரியது. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சாதி, மதங்களைக் கடந்து அனைவருக்குமான கட்சி பாஜக. இந்த நிகழ்ச்சி மூலம் பாஜக, ஸ்டார் நோன்பை திறக்கும் நிகழ்ச்சியில் நடத்தினால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இன்னும் எத்தனை முறை இன்னும் எத்தனை முறை MP தேர்தல் நடந்தாலும் பிரதமராக மோடியே வருவார். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வலம் வருகிறார். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென பணியாற்றுகிறார். நாட்டின் பெருமையை உலக அளவில் நிலைநாட்டி, பல நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளார். அனைத்து மக்களையும் சமமாக பார்க்கும் பண்பு கொண்டவராக மோடி உள்ளார். தமிழ்நாட்டில் யாராலும் தீர்க்க முடியாத ஜல்லிக்கட்டு பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்து வைத்த பெருமை மோடியையே சாரும்” என்றார்.