தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பர் - ஓபிஎஸ்

 
ops

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. 

ops

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதேபோல் அதிமுகவி இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பலறும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தொண்டர்கள் தன் பக்கம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பாம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உரிய அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.  என்னுடைய நிலைப்பாட்டை அறிக்கை மூலம், விரைவில் தெரிவிக்க உள்ளேன்” எனக் கூறினார்.