“தொலைந்த எனது மகிழ்ச்சியை திமுகவில் இணைந்தவுடன் ஸ்டாலின் தந்துள்ளார்”- ஓபிஎஸ்

 
ops

ஜெயலலிதா மறைந்ததிலிருந்து தொலைந்த எனது மகிழ்ச்சியை திமுகவில் இணைந்ததுடன் திரும்ப எனது மகிழ்ச்சியை  முதலமைச்சர் ஸ்டாலின் தந்துள்ளார்.

op


தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் திமுக சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தலைப்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜான் ஓ.பி ரவீந்திரநாத் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்சியில் பேசிய ஓ. பன்னீர்செல்வம் , “ஜெயலலிதா மறைந்ததில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி வரை என்னுடைய மகிழ்ச்சியை நான் தொலைத்து இருந்தேன், தற்போது தி.மு.கவில் இணைந்து மீண்டும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அந்த மகிழ்ச்சியை எனக்கு திரும்பு தந்துள்ளார். நான் ஒரு தொண்டனாக மட்டுமே தான் திமுகவில் இணைந்துள்ளேன் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் இருந்து வந்தார்.மக்கள் விரும்புகிற ஆட்சியை கடந்த 5 ஆண்டுகளில்  கொடுத்து நாட்டு மக்களை பற்றி சிந்திக்க கூடிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 40 சதவீத நிதியில் 4 சதவீதம் மட்டும் வழங்கியது மத்திய அரசு, நிதி வழங்கவில்லை என்றாலும் மாநில நிதியில் இருந்து நாங்கள் அறிவிக்கின்ற திட்டங்களை மட்டும் இல்லை நீங்கள் (மத்திய அரசு) அறிவிக்கின்ற திட்டங்களையும் முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். 

முதலமைச்சராவதற்கு எந்த அளவு நன்றி கெட்ட தனமாக நடந்து கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்பது நாடறிந்தது, எனக்கு கொடுத்த பதவியை நன்றியுடன் மீண்டும் ஜெயலலிதாவிற்கு கொடுத்து விட்டு வந்தவன் நான். 9 கோள்களில் முதன்மையான கோல் உதயசூரியன் தான் அந்த வெற்றி சின்னம் நமக்கு கிடைத்து இருக்கிறது, அதனை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.