“ஜெயலலிதா சொன்னதையே செய்தேன்”- வைகோ குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் பதில்
Nov 7, 2025, 19:15 IST1762523143870
2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு ஓபிஎஸ் பொய் சொன்னதே காரணம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், தற்போது அதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய ஓபிஎஸ், “ஜெயலலிதா என்ன சொல்வாரோ அதை மட்டும்தான் பேசி இருக்கிறேன். 14 ஆண்டுகளுக்கு பிறகு வைகோ இதை பேசுவது ஏன்? வைகோ என்ன கூறியிருந்தாலும் அவர் மீதான என் அன்பு, மரியாதை மாறாது. என் மீது வைகோ முன்வைத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை. வைகோவின் மனம் புண்படும் என்பதால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. நான் பதில் கூற வேண்டும் என வைகோ விரும்பினார் அதற்கு பதில் அளிப்பேன். நான் சொல்லும் பதில் அவர் மனம் புண்படும்படியாக இருக்கும் என்பதால் அந்த பிரச்சனைக்குள் போக விரும்பவில்லை” என்றார்.

