தவெகவுடன் கூட்டணியா?- நாளை வரை காத்திருங்கள் என ஓபிஎஸ் பேட்டி

 
ops ops

அனைத்து விஷயங்களுக்கும் நாளை காலை சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். பேட்டியளித்துள்ளார்.

ops

அண்மையில் தமிழ்நாடு வருகை தந்த பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியும் அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதோடு சில தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசகர் பண்ருட்டி இராமச்சந்திரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும், நடிகர் விஜய்யின் தவெக தலைவருமான கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
  
இந்நிலையில் இன்று சென்னை செல்வதற்காக தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள தனது இல்லத்தில் மதுரை விமான நிலையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டார். முன்னதாக இது தொடர்பாக யாருடன் கூட்டணி என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஓ‌.பி.எஸ்., அனைத்து விஷயங்களுக்கும் நாளை காலை சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.