அதிமுகவின் ஒற்றுமைக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்- ஓபிஎஸ்

 
ops

அதிகாரம், ஆணவம்தான் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்க காரணம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ops

சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம், “மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து ஈபிஎஸ் பாடம் படிக்க வேண்டும். பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் அதிமுக ஒன்றுபட வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் ஈபிஎஸ் கேட்கவில்லை. தற்போது அதிமுக அபாய கட்டத்தில் உள்ளது. அதிமுக ஒன்றுப்பட வேண்டுமென பிரதமர் உட்பட அனைத்து தலைவர்களும் விரும்புகின்றனர். அனைவரும் ஒன்றிணைய எத்தகைய தியாகத்தையும் செய்ய தயார். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் NDA கூட்டணிக்கு ஆதரவு. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் இந்த அரசு தோல்வியை கண்டுள்ளது” என்றார்.