கட்சியும், சின்னமும் மனதில் உள்ளது, அதை யாராலும் அழிக்க முடியாது: ஓ.பன்னீர்செல்வம்

 
ops

அதிமுக கரைவேட்டி இல்லாமல் காவி வேட்டி அணிந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேர்வைக்கு வருகை தந்தார்.

Image


தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று  நடைபெற்றது. அதில்,  முதல்வர் ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றும் வகையில் தீர்மானத்தை அவர் கொண்டுவந்தார். முதலமைச்சர்  ஸ்டாலின் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்கான முதல்வரின் தனித் தீர்மானத்துக்கு நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பிற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தார்.

Image

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “இன்று சிறப்பு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஆதரவளிக்கிறேன். தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கும் மசோதாவும் தான் இன்று சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது என்பது கூட தெரியாமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளார்கள். ஆளுநருக்கும், ஆளும் அரசுக்கும் எப்போதும் பரஸ்பரம் இருக்க வேண்டும். முன்னுக்கு பின் முரணாக இருக்கக் கூடாது. கட்சியும், சின்னமும் மனதில் உள்ளது, அதை யாராலும் அழிக்க முடியாது” என்றார்.