பிரிந்த சக்திகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி- ஓ.பன்னீர்செல்வம்

 
ops

எங்கள் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அது நடக்காது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ops


சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், “மது ஒழிப்பு மாநாட்டுக்கு திருமாவளவன் பொதுவாக தான் அழைப்பு விடுத்துள்ளார். எங்களுடைய நிலைப்பாடு தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்போம் என்று ஏற்கனவே சொல்லி இருந்தோம். இதற்கு பூர்வாங்க நடவடிக்கை எடுக்கும் போது இதற்கு பதில் கிடைக்கும். என்னை பொறுத்தவரை மது தமிழகத்தில் இருக்கக் கூடாது தான் என்னுடைய நிலைப்பாடு. 

முதல்வர் வெளிநாட்டு பயணம் உண்மையிலேயே அந்த முதலீடு ஈர்க்கப்பட்டு இங்கு வந்து சேர்ந்தால் தொழிற்சாலை துவங்கினால் உள்ளபடியே நான் வரவேற்பேன். பிரிந்த சக்திகள் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழல் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.


உங்கள் இளைய மகன் அரசியலில் உள்ள சூழலில் மூத்த மகன் அரசியலுக்கு வருவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா என்ற கேள்விக்கு, எங்கள் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள், அது நடக்காது எனக் கூறினார்.