திருப்பதியில் கொட்டும் மழை- குடை பிடித்தபடி சென்று ஓபிஎஸ் செய்த செயல்

 
ஒப்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி சென்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சாமி  தரிசனம் செய்தார்.


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அவரது மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் இன்று காலை நடைபெற்ற வி.ஐ.பி.  தரிசனத்தில் புரட்டாசி மாதம் என்பதால்  சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். இதையடுத்து கோவிலுக்கு எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் தரிசனம் செய்து அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து வழிபட்டனர்.  இதையடுத்து கார் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர்.