கட்சியை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம்- ஓபிஎஸ்

 
ops

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசன், பாரிவேந்தர், தேவநாதன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளரை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “இரட்டை இலை சின்னம் இல்லையென்றாலும் 2 இலைகள் உள்ள மாம்பழம் நமது சின்னம். பரிட்சயமான பெயரான அன்புமணிக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் . 2021ம் ஆண்டு பொதுதேர்தலில் எடப்பாடியை முதலமைச்சரை அறிவித்தன் மூலம் திமுகவிக்குக்கான வெற்றி கதவை திறந்து வைத்தோம். அனைத்து நிலையிலும் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கள்ளச்சாராயம், போதைப்பொருள் நிறைந்த ஆட்சியாக உள்ளது.

Image

விசுவாச மிக்க தொண்டர்கள் என்னுடன் இருப்பதால் கழகத்தை மீட்பதற்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன். கட்சியை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம். நேரம் வரும்போது சசிகலாவை சந்தித்து, அனைவரையும் ஒன்றிணைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு தொண்டர்களின் உரிமைகளை காப்பேன்” என்றார்.