ஊட்டி மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 
nilgiris

ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி இன்று  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

tnt

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நீலகிரி மாவட்டத்தில் இன்று 126-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

local holiday

இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேற்கண்ட விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 18-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.