உதகை தொட்டபெட்டா மலைச்சிகரம் மூடல்

 
தொட்டபெட்டா

உதகை அருகே உள்ள  தொட்டபெட்டா மலைச்சிகர பகுதிக்கு ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி இன்று மூடபட்டுள்ளது. 

உதகை அருகே உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்தைக் காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வார விடுமுறையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வெட்டப்பட்ட மலை சிகரத்தை காண வந்த நிலையில் நேற்று மாலை திடீரென ஒரு ஒற்றை யானை மலை சிகரத்திற்கு செல்லும் சாலையில்நடந்து வந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

யானை தொடர்ந்து தொட்டபெட்டா லை சிகரத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா மலைச்சிகரம் இன்று ஒரு நாள் மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மலை சிகரத்தை காண சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் யானையின் நடமாட்டத்தை தரை வழியாகவும் ட்ரோன் கேமரா மூலமாக தீவிரமாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது இந்த பகுதிக்கு வந்துள்ள ஒற்றைக்காட்டு யானை கடந்த ஆண்டும் இதே போல வந்து ஒரு வாரம் முகாமிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.