அச்சச்சோ மறுபடியுமா ? ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல்நிலை பாதிப்பு..!

 
1

ஷவர்மா என்பது இங்கே பலருக்கும் ரொம்பவே விருப்பமான ஒரு உணவாக இருக்கிறது. இருப்பினும், அதை முறையாகச் சமைக்கவில்லை என்றால் மோசமான உடல்நல பாதிப்புகள் ஏற்படும். ஏனென்றால் ஷவர்மாவை பொறுத்தவரை அந்த ஷவர்மா ஸ்டாண்டில் மட்டுமே சமைக்கப்படுகிறது. அடுப்பில் வைத்து முறையாக சமைக்கப்படுவதில்லை. இதனால் அந்த ஷவர்மா சரியாகச் சமைக்கப்படாமல் போக வாய்ப்புகள் அதிகம். அதைச் சாப்பிடும் போது தான் இங்கே பலருக்கும் உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகிறது. கடந்தாண்டு ஷவர்மாவை சாப்பிட்ட சிலர் உயிரிழந்த சம்பவங்களும் கூட நடந்தது. இதையடுத்து ஷவர்மாவுக்கு சில கட்டுப்பாடுகள் கூட விதிக்கப்பட்டது.இந்தச் சூழலில் தான் மீண்டும் அதேபோன்ற ஒரு பகீர் சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகான் பகுதியில் சாலையோர கடையில் ஷவர்மா சாப்பிட்ட பலருக்கு அடுத்தடுத்து புட் பாய்சனிங் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 12 பேருக்குப் புட் பாய்சனிங் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், நல்வாய்ப்பாக அவர்களுக்கு மோசமான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அந்த 12 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 9 பேர் இப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மூன்று பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.