அச்சச்சோ..!! காளான் சாப்பிட்ட 12 பேருக்கு வாந்தி, மயக்கம்..!!
பொன்னேரியை அடுத்த பெரியகரும்பூர் கிராமத்தில் நடவுப் பணிகளுக்காக 6 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் மழையில் முளைத்திருந்த காளான்களைப் பறித்துச் சமைத்துச் சாப்பிட்ட தொழிலாளர்கள் 12 பேருக்கும் திடீரென கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், சம்பா பருவத்திற்காக நடவு பணிகளை மேற்கொள்ள, ஆந்திரா மற்றும் வடமாநில தொழிலாளர்கள் வந்துள்ளனர்.
இந்நிலையில், பொன்னேரி அடுத்த பெரியகரும்பூர் கிராமத்தில், நேற்று முன்தினம் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், நடவுப்பணிகளில் ஈடுபட்டனர்.
பணிகள் முடிந்து, மழையின் காரணமாக வயல்வெளியில் முளைத்திருந்த காளான்களை பறித்துவந்து சமைத்து, இரவு உணவாக சாப்பிட்டனர். இதனால், அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு, வாந்தி, மயக்கம் என பாதிப்பிற்கு உள்ளாகினர். பாதிப்படையந்த ஆறு பெண்கள் உட்பட, 12 தொழிாலளர்கள், உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

