உதயதிநிக்கு மட்டும் ஜீன் 19ம் தேதி தேர்தல் போல... கலாய்க்கும் சாட்டை துரைமுருகன்..!

 
1

நாடு முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் - 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் - 47.1 கோடி, மூன்றாம் பாலினம் - 48,044 பேர் உள்ளனர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகரித்துள்ளனர். இந்த தேர்தலில் 1.8 கோடி பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. ஒரே கட்டமாக 22 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் நடத்தப்படவுள்ளது. இது முதல் கட்ட வாக்குப்பதிவாகும்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போதுதான் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். எய்ம்ஸ் செங்கலை கையில் எடுத்து உதயநிதி மேற்கொண்ட பிரச்சாரம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து தேர்தலுக்குப் பிறகு திமுக இளைஞரணி செயலாளர் ஆக்கப்பட்டார் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு 2021ல் உதயநிதிக்கு சீட் கொடுக்கப்பட்டு, அதில் அவர் வென்று பின்னர் அமைச்சரும் ஆனார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் "இந்தியா கூட்டணி" வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளார்.இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் இதனை ட்வீட் செய்து கலாய்த்து உள்ளார்.. " ஜீன் 19 ஆம் தேர்தல் உதயதிநிக்கு மட்டும் தனியாக நடக்கும் போல...என கலாய்த்துள்ளார்